"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
தமிழக  அரசின் தவறான நிதி மேலாண்மையால், 4 புள்ளி 56 லட்சம் கோடி ரூபாய் கடனும்,  25 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை என்ற அளவிற்கு மோசமாகி விட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தமிழக  பொருளாதாரத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டதாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, அது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை என்று ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார். கொரோனா பேரிடரால் ஒவ்வொரு குடும்பமும்  பாதிக்கப்பட்டுள்ளதால்,  அரசு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்