கணவனை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பிய மனைவி

நாகர்கோவில் அருகே தன் ஆண் நண்பருடனான வாழ்க்கைக்காக கூலிப்படையை அனுப்பி கணவனை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கணவனை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பிய மனைவி
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். 38 வயதான இவர், புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளார். 

சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷை, மர்ம கும்பல் திடீரென உள்ளே புகுந்து தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தன் கணவருடன் வீட்டில் இருந்த காயத்ரிக்கு ஒரு கீறல் கூட இல்லை, கொள்ளை சம்பவம் எதுவும் நடக்கவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மனைவி காயத்ரியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படவே, அவரின் செல்போன் அழைப்புகள் சந்தேகத்தை உறுதிபடுத்தியது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளியான தகவல் அதிர்ச்சி ரகம். 

திருமணத்திற்கு முன்பாக ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த யாசீன் என்பவரை காதலித்து வந்துள்ளார் காயத்ரி. ஆனால் இவர்களின் காதல், திருமணம் வரை செல்லவில்லை. இதனிடையே கணேஷ் உடன் திருமணம் நடந்த போதிலும் காயத்ரியின் காதல் யாசீனுக்கு தான் என்று இருந்திருக்கிறது. 

இதனிடையே அந்த பகுதியில் ப்ளே ஸ்கூல் தொடங்கியிருக்கிறார் யாசீன். தன் காதலனுடன் சேர இதுவே சரியான நேரம் என நினைத்த காயத்ரி, ப்ளே ஸ்கூலுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். இதனால் மீண்டும் இவர்களின் காதல் துளிர்க்கவே, வீடு வரை இவர்களின் உறவு நீண்டிருக்கிறது. 

யாசீனுக்கு தொழில் தொடங்க தன் கணவரிடம் இருந்து வீட்டு பத்திரத்தை வாங்கி அடகு வைத்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் அளவுக்கு காயத்ரியின் கண்ணை  காதல்  மறைத்திருக்கிறது. ஆனால் இந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத சூழல் யாசீனுக்கு ஏற்படவே, கணேஷை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்கள். 

இதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே காயத்ரி தான் என்பது அதிர்ச்சி தகவல். இதற்காக கூலிப்படைக்கு 2 லட்ச ரூபாய் பணமும் பேசியிருக்கிறார் காயத்ரி. சம்பவத்தன்று வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு திட்டமிட்டு கூலிப்படையை வீட்டுக்குள் விட்டு கணவனின் கதையை முடிக்க திட்டம் தீட்டியிருக்கிறார் காயத்ரி. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணேஷ், இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவங்கள் எல்லாம் தெரியவரவே மனைவி காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

காயத்ரியின் ஆண் நண்பரான யாசீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்