பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் - பயனாளிகள் சேர்க்கையில் முறைகேடு

பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
x
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் துறையின் பாஸ்வேர்டை திருடி விவசாயிகள் அல்லாத பல லட்சம் பேர் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடலூரில், கிசான் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து விரிவான விசாரணை நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்