தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி - போலி மந்திரவாதியை கைது
பதிவு : ஆகஸ்ட் 12, 2020, 08:19 PM
திண்டுக்கல் அருகே தங்கத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரிடம் திருச்சி மாவட்டம் மலம்பட்டியை சேர்ந்த குமரேசன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். தன்னை ஒரு சாமியார் என அறிமுகப்படுத்தியதோடு, நகைகளை இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இவரின் பேச்சை நம்பிய மலைச்சாமி மற்றும் அவரது நண்பர்  சுப்ரமணி ஆகிய 2 பேரும் 26 சவரன் நகைகளை கொடுத்துள்ளனர். பூமியில் நகைகளை புதைப்பது போல நடித்த குமரேசன், அதை எடுத்துக் கொண்டு மாயமானார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 2 பேரும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மோசடி சாமியாரான குமரேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.