பழம்பெரும் பாடலாசிரியர், கவிஞர் முத்துசாமி காலமானார் - நாடக கலைஞர்கள் அஞ்சலி
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 05:59 PM
பழம்பெரும் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் முத்துசாமி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி,கடந்த 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.  நாடககலையின் மீது கொண்ட ஆர்வத்தால் பாடல் மற்றும் பல வெண்பாக்களை இவர் எழுதியுள்ளார். வெண்பா வேந்தர் என்ற பட்டமும் பெற்றுள்ள இவர், தை பிறந்தால் வழிபிறக்கும்  என்ற படத்தில் எழுதிய "மண்ணுக்கு மரம் பாரமா என்ற பாடலை எழுதி புகழ்பெற்றார்.  கவிஞர் என்பதால் ஊக்கத்தொகை பெற்ற வந்த முத்துசாமி, உடல்நிலை சரியில்லாமல், இன்று அதிகாலை காலமானார். அவரது பூத உடலுக்கு, நாடக கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.