"கொரோனா தடுப்பில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்" - முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

கொரோனா தடுப்பில் சரியான திசையில் நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம் - முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை
x
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன், இன்று காலை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு, காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பில் சரியான திசையில் மத்திய அரசு, நகர்ந்து கொண்டிருப்பதாக, குறிப்பிட்டார். நாள் தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நோய் தடுப்பு முயற்சிகள் வெற்றியடைந்ததை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்