சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்

சென்னை, அந்தமான் இடையே கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்
x
சென்னை - அந்தமான் போர்ட் பிளேரை  கடல்வழியாக இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேபிள் சென்னையையும் போர்ட் பிளேரையும் சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது. இதன்மூலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளை போல் செல்போன், லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும். இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  அதைத் தொடர்ந்து இரண்டாயிரத்து 300 கி.மீ. தொலைவுக்கு ஆயிரத்து 224 கோடி ரூபாயில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் சென்னை- போர்ட்பிளேர் இடையே நம்பகமான வலுவான, அதிவேக தொலைத்தொடர்பு பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்கும். இது அந்தமான் தீவுகளில் சுற்றுலா, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகமாய் அமையும்.  இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

Next Story

மேலும் செய்திகள்