இட ஒதுக்கீடு முறையால் நீர்த்துப் போகிறதா சமூக நீதி? - குறைந்த மதிப்பெண் எடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி

உயர்ஜாதிகள் மாணவர்கள், எஸ்.சி/எஸ்.டி மாணவர்களை விட குறைவான மதிப்பெண் பெற்று, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது வெளச்சத்திற்கு வந்துள்ளது.
இட ஒதுக்கீடு முறையால் நீர்த்துப் போகிறதா சமூக நீதி? - குறைந்த மதிப்பெண் எடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி
x
2019 சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களில், முன்னேறிய வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள், ஓபிசி பிரிவினரை விட குறைவாக இருப்பது மீண்டும் கேள்விக்குள்ளாகி வருகிறது. 

முதல்நிலை, இரண்டாம்நிலை, இறுதி தேர்வு ஆகிய மூன்றிற்கும் ஓபிசி பிரிவினரை விட குறைவாகவும்,

இரண்டாம் நிலைத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினரை விட குறைவாகவும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, சமூக இடஒதுக்கீடு என்பது திறமைக்கு தரப்படும் நியாயமான அங்கீகாரம் என பதிவிட்டுள்ளார்.

இதனிடைய யுபிஎஸ்சி வாரியத்தில், அனைத்து சமூகத்தினருக்கும் உறுப்பினராக இடம்பெற வாய்ப்பளிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் வலுவாக எழுந்துள்ளது.

எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையால், சமூக நீதி நீர்த்துப் போக செய்துவிடக் கூடாது என்பதும், இதற்கான அரசியல், சட்ட போராட்டங்கள் இனி கடுமையாகும் என்றே தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்