தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு - போலீசார் தீவிர வாகன சோதனை
பதிவு : ஆகஸ்ட் 09, 2020, 11:23 AM
தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும், போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 193 இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரின் பிரதான சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து, வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீறி வெளியே சென்றால், வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் வெறிச்சோடிய சாலைகள்

முழு ஊரடங்கையொட்டி மதுரையில் உள்ள முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு  எண்ணிக்கை 285ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முழு ஊரடங்கு - போலீசார் தீவிர சோதனை

நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய பகுதிகளான நெல்லை டவுண், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

138 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

53 views

பிற செய்திகள்

"பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்" - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என கூறியுள்ளார்.

10 views

எஸ்.பி.பி. நினைவலைகளை பகிர்ந்த பிரபலங்கள்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.

10 views

மண்ணுலகில் இருந்து விடைபெற்றார் பாட்டுத் தலைவன் - எஸ்.பி.பி.க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

காற்றில் கரைந்த பாடும் வானம்பாடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசைக்கலைஞர்கள் இசையால் இறுதி அஞ்சலி செலுத்தினர்...

7 views

தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 647 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

82 views

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

43 views

முக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்

காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.