"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள  பதிவில், புதிய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் முடிவு ஒருதலைப் பட்சமானது என தெரிவித்துள்ளார். தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் மறைக்க கூடிய வகையில் தேசிய கல்விக் கொள்கை  உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.  தேசிய கல்விக்கொள்கை சமூக நீதிக்கு எதிராக உள்ளது என பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர்,  அதை  நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்