தேனியில் 8 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு - இன்று ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா
பதிவு : ஆகஸ்ட் 08, 2020, 02:45 PM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2020, 03:36 PM
தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர். 675 பேர் வீட்டுத் தனிமையில் உள்ள நிலையில், 746 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், 42 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 454 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 344 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 ஆயிரத்து 733 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 278 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.