கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி
x
கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை,  முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், மரணம் அடைந்தால், 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்" என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார். "கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என கடந்த, ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவச் செலவுக்காக முதலமைச்சர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது? என்ற தகவல்களை அதிமுக அரசு வெளியிடாமல், இரும்புத்திரை போட்டு மறைத்து வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார். அவசர டெண்டர்களுக்கும் - ஊழல் காரியங்களுக்கும் நிதி ஒதுக்குவதைத் தள்ளி வைத்து விட்டு, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், (gfx in 5)  உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்