கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு எதிரொலி - ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
பதிவு : ஆகஸ்ட் 07, 2020, 02:24 PM
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

கேரளா மாநிலம் வயநாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வரும் ஒகேனக்கல் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு  37 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து படிப்படியாக மேலும் அதிகரித்து நாளைக்குள் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.