தொடர் உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனை
பதிவு : ஆகஸ்ட் 07, 2020, 02:05 PM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஒரு கிராம் 46 ரூபாய் உயர்ந்து கிராம் 5 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 360 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 83 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் பண்டிகை நாட்களில் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.