கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வெள்ளலூர் - சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிபுதூர் - பட்டணம்புதூர் சாலைகளில் தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு உள்ளது.சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சொக்கநாத பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு - திருப்பூர் மாவட்டத்தை இணைக்க கூடிய இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்