"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?" - விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்

நில தகராறில் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா? - விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்
x
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இமயம்குமார் என்பவருக்கும்  இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது, இது  தொடர்பான பிரச்சினையில் இமயம்குமார் தரப்பினர் அரிவாளால் தாக்கியதையடுத்து, எம்.எல்.ஏ தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது, இது தொடர்பான  வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர், இதனையடுத்து இதயவர்மன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இதயவர்மன் உள்பட 11 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர், அந்த மனு மீதான விசாரணையின் போது, இதயவர்மனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,   அவருக்கு தீவிரவாத  அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர், இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆவணங்கள், காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கை  உள்ளிட்ட , அனைத்தையும் தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்