பேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.
பேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்
x
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான். அப்படி ஒருநாள் ஷபின் விரித்த வலையில் விழுந்திருக்கிறார் மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமி. பேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்த சிறுமியின் படங்களுக்கு எல்லாம் ஷபின், லைக்ஸ்களை அள்ளிவிட, இருவருக்கும் நெருக்கமும் அதிகமானது. சாட் உரையாடல்கள் காதல் பேச்சுகளாக மாறி நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர். சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்த ஷபின், அவரை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்டார். ஊரடங்கு நேரத்தில் சிறுமியை வீட்டை விட்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் ஷபின். காதலனின் பேச்சை நம்பிய அந்த சிறுமியும், ஏதோ டூருக்கு செல்வது போல மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார். 3 நாட்களாக டூவீலரில் பயணித்தது இந்த இளம் காதல் ஜோடி. மதுரையில் இருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு டூவீலரிலேயே பொள்ளாச்சி சென்றுள்ளார் ஷபின். பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் என அவ்வப்போது இடத்தையும் மாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது தான் ஷபினை பற்றிய தகவல் தெரிய, அவரின் செல்போன் எண்ணை வைத்து பின்தொடர்ந்தனர். பொள்ளாச்சி, திண்டுக்கல் என மாறி மாறி இருந்த அவர்கள் கடைசியில் திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருந்த போது கையும் களவுமாக சிக்கினர். அப்போது தான் சிறுமி தனக்கு நேர்ந்த அத்தனை சம்பவங்களையும் சொல்லியிருக்கிறார். காதலித்தாலும் கூட, தன்னை கட்டாயப்படுத்தி இத்தனை நாட்கள் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததையும் சிறுமி கூறியிருக்கிறார். ஊரடங்கு நாட்களாக இருந்த போதிலும் லாட்ஜ்களில் தங்குவதற்கு ஷபின் அதிக பணம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஷபினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் ஷபினின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து வரும் அவர்கள், இவரின் வலையில் வேறு யாரும் சிக்கியிருக்கிறார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்