நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் - "ஆக.10க்குள் பட்டியல் அளிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்த பட்டியலை, வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் - ஆக.10க்குள் பட்டியல் அளிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
x
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் தற்போது 40 விழுக்காடு கட்டணங்களையும் , பள்ளி திறந்த பிறகு 30 விழுக்காடு மற்றும் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்த பிறகு மீதமுள்ள 30 விழுக்காடு கட்டணங்களை பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பதாக அதிகளவிலான புகார் வந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, பள்ளிகள் குறித்த விவரங்களை வரும் 10ஆம் தேதிக்குள் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்