"உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது" - புதிய கல்விக் கொள்கை பற்றி எல்.முருகன் கருத்து

ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலக தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழங்க இருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது - புதிய கல்விக் கொள்கை பற்றி எல்.முருகன் கருத்து
x
ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலக தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழங்க இருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள் என கல்வித் துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்பட இருக்கின்றன என்றும், தாய் மொழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல என்றும், அதில் ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
---

Next Story

மேலும் செய்திகள்