காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு - காதலியின் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்
பதிவு : ஆகஸ்ட் 03, 2020, 02:14 PM
தனது காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் ஆத்திரமடைந்த காதலர் காதலியின் தந்தையை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது முருகராஜ் குடும்பத்திற்கும், வடகரை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் குடும்பத்திற்கும் நடந்த வாய்த்தகராறு முற்றி, வெட்டுக்குத்தில் முடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையநல்லூர் போலீசார், காயம் அடைந்த நாகராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். மற்றொருவரான முருகராஜ் உடலில் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் மோதல் நடந்தது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயது முருகராஜ் ஜேசிபி ஆபரேட்டராக இருந்து வருகிறார்.

வடகரை கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த முருகராஜ், பக்கத்து வீட்டு பெண் 23 வயது சுப்புலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சுப்புலட்சுமியின் பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 
இதனை அறிந்த முருகராஜ் காதலி சுப்புலட்சுமியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை அவரது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆத்திரமடைந்த சுப்புலட்சுமியின் தந்தை நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், முருகராஜியின் சொந்த ஊரான கண்மணியாபுரம் கிராமத்திற்கு சென்று தகராறு செய்தாக கூறப்படுகிறது.

இருதரப்பிற்கும் நடந்த வாக்கு வாதம் பின்னர் மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் முருகராஜ், கட்டையால் தாக்கியதில், சுப்புலட்சுமியின் தந்தை நாகராஜ் இரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாகராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலன் முருகராஜ் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

388 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

314 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

71 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

18 views

பிற செய்திகள்

நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவன் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கடந்த 9 ஆம் தேதி நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

5 views

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை அயனாவரம், ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

4 views

பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு

காரைக்கால் சேத்தூர் அருகே குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

8 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

1653 views

"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி..." - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

108 views

7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்

கொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.