"வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், வேலூர், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் வரும் 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம்  அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்