கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் - நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் துவங்க உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 12:58 PM
மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை துவங்குவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
தமிழகத்தில்,  109 அரசு கலை அறிவியல்  கல்லூரிகளில் 92 ஆயிரம் ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மூன்று லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் வகுப்புகளை துவக்குவதற்கும் உயர் கல்வித்துறை முழுவீச்சில் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி சென்னை பல்கலைக் கழகம்,  தனது எல்லைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும்  நாளை முதல் முதுகலை வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் , நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்  அதிவேக இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக பாடப்பொருள் குறித்த வீடியோக்களை  அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

304 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

283 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.28 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒனேகக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

0 views

அமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா?

சென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 views

அங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா? - சிபிசிஐடி விசாரணை

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 views

"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5 views

உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

117 views

கேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.