தேனி - மேலும் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.
தேனி - மேலும் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, புதிதாக 297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 85 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 2 ஆயிரத்து 207 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆக உள்ளது. 

நெல்லை - மேலும்167 பேருக்கு கொரோனா 

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி, 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 68 பேர் குணமடைந்துள்ள நிலையில், 44 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது, 2 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்