கடலூர் தாழங்குடா மோதல் தொடர்பாக 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் பயங்கர மோதல் வெடித்தது.
x
தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் பயங்கர மோதல் வெடித்தது. இதில், 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைக்கப்பட்ட நிலையில் வலைகளும் தீக்கிரையானது. சம்பவ இடத்திற்கு விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் மாவட்ட  எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் தலைமையில் ஏராளமான போலீஸார் விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினர். மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ முழுவதுமாக கட்டுப் படுத்தப்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தில் இருந்த ஆண்கள் பலர் தலைமறைவாகி விட்ட நிலையில், 20 பேரை போலீசார் பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருதரப்பை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்