சுழலாத சக்கரங்களால் நகராத வாழ்க்கை - காத்திருக்கும் 10 லட்சம் பயணிகள்...வெறிச்சோடிய சென்ட்ரல் ரயில் நிலையம்.....

குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில், செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லும் பயணிகளின் நண்பன் தான் சென்னை புறநகர் மின்சார ரயில்கள்.
x
குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில், செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லும் பயணிகளின் நண்பன் தான் சென்னை புறநகர் மின்சார ரயில்கள். பொது முடக்கத்தால் நான்கு மாதங்களாக நகராமல் முடங்கிய இந்த ரயில்களால், மக்களின் வாழ்க்கை சக்கரமும் முடங்கி கிடக்கிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலானோர் நாள்தோறும் வழக்கமாக பயணிப்பது, மின்சார  ரயில்களில் தான். 

* வேலை, வியாபாரம், படிப்பு என  தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மின்சார ரயில்கள் மூலம் சென்று வந்தனர்.

* அதிகபட்சமாக சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு மட்டும், நாள் ஒன்றுக்கு வந்து செல்பவர்கள் 2 லட்சத்துக்கு மேல். 

* ஆனால் இன்று பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன இந்த ரயில் நிலையங்கள். 

* கொரோனா பொது முடக்கத்தால் கடந்த நான்கு மாதங்களாக ரயில் சேவைகள் ரத்தாகி உள்ளன. இந்த மாதமும் ரயில் சேவைக்கு தடை நீடிக்கிறது. 

* நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வந்த மின்சார ரயில்கள் தற்போது இயங்காததால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர், ரயில்வே ஊழியர்கள்...

Next Story

மேலும் செய்திகள்