மருத்துவர்களை கவுன்சிலர் மிரட்டிய விவகாரம்: தேடப்படும் குற்றவாளியான வி.சி.க. கவுன்சிலர் - ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்டும் பிடிக்காதது ஏன்?

சேலம் அருகே கொரோனா தடுப்பு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மிரட்டியதாக கூறப்படும் விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலரை 4 மாதங்களாகியும் கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவர்களை கவுன்சிலர் மிரட்டிய விவகாரம்: தேடப்படும் குற்றவாளியான வி.சி.க. கவுன்சிலர் - ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்டும் பிடிக்காதது ஏன்?
x
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஒன்றியக்குழுவில் 19வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் சாமுராய்குரு. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பல்வலிக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாமுராய்குரு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கவுன்சிலர் சாமுராய் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டத்தில் சாமுராய் கலந்து கொண்டதற்கான ஆதாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி கூட்டத்துக்கு வந்தது எப்படி? அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்