ராஜா முத்தையா மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை" - முகாமில் உள்ள நோயாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ

சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்ள கொரோனா சிறப்பு வார்டில், எந்த அடிப்படை வசதியும் இல்லை என, நோயாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராஜா முத்தையா மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை - முகாமில் உள்ள நோயாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ
x
சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்ள கொரோனா சிறப்பு வார்டில், எந்த அடிப்படை வசதியும் இல்லை என,  நோயாளிகள் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படும் அனைவரும் அந்த மருத்துவமனை  சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்கு நோயாளிகளுக்கு சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதாகவும், நேரத்திற்கு உணவுகள் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டு எழுந்துள்ளது. 33 பேர் இருக்கும் வார்டில் குடிநீர் கூட சரியாக வழங்கவில்லை என வெளியான வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்