ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது
பதிவு : ஜூலை 31, 2020, 01:55 PM
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் தனியார் கல்வி நிறுவனம் நுழைவாயிலில் உள்ள ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சத்து 5௦ ஆயிரம் பணம் தீயில் கருகின.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த  புதுச்சத்திரம்  தனியார் கல்வி நிறுவனம் நுழைவாயிலில் உள்ள ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சத்து 5௦ ஆயிரம்  பணம் தீயில் கருகின,  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சேலம் அருகே நடைபெற்ற வாகனசோதனையின் போது லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுனர் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்,   அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மூவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ராசிபுரத்தில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றதும் அவர்கள்தான் எனவும் தெரியவந்தது இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்

காணொலி மூலம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் - நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் காணொலி காட்சி வாயிலாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் குறைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த காணொலிக் காட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்கள் கைபேசியில் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்திற்குள்  சென்று தங்கள் பெயர் மற்றும் ஊர் ஆகியவற்றைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்தரத்தில் தொங்கிய மின்கம்பம் - செய்தி வெளியான 24 மணி நேரத்தில் புதிய மின்கம்பம் - தந்தி டிவி செய்தி எதிரொலி

சிவகங்கை மாவட்டம் மேலரதவீதியில், அந்தரத்தில் தொங்கியபடி இருந்த மின்கம்பம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவந்தது. இந்நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து, செய்தி வெளியான 24 மணி நேரத்தில், பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை நட்டனர்...

மொபைல் டவர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் - மலை கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

நீலகிரி மாவட்டம்  குரும்பாடி, கோழிக்கரை, புதுக்காடு  உள்ளிட்ட மலை கிராமங்களில் மொபைல் டவர்கள் இல்லாததால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்,  தமிழகம் முழுவதும் உள்ள மலை கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்குள்ள குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குருவிகளின் இனப்பெருக்கத்திற்காக இருளில் வாழ்ந்த கிராமம் - கிராமத்தின் வளர்ச்சிக்கு திமுக சார்பில் ரூ.50,000 நிதி

சிவகங்கையில் குருவிகளின் இனப்பெருக்கத்திற்காக ஒரு கிராமமே ஒரு மாத காலமாக தெரு விளக்குகளை எரிய விடாமல் இருளில் வாழ்ந்துள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட பொத்தகுடி கிராமத்தினரின் இந்த மனிதாபிமான செயலை திமுக தலைவர்  ஸ்டாலின் பாராட்டி, கிராம வளர்ச்சிக்கு தனது சொந்த நிதியிலிருந்து திமுக சார்பாக  50,000 ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார். ஸ்டாலின் சார்பாக 
மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் , 
இந்த செயலை முன்னெடுத்த கிராமத்து இளைஞர் கருப்பு ராஜா, அவரது மனைவி சுகன்யா மற்றும் கிராமத்தினருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

ஒரே பகுதியை சேர்ந்த 25 பேருக்கு கொரோனா

சென்னை திருவொற்றியூரில்  கிராம தெருவை சேர்ந்த  25 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால் அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள்  தடுப்பு வேலிகள் அமைத்து சீல் வைத்தனர், திருவொற்றியூர்  மண்டலத்திற்கு  உட்பட்ட பகுதியில் இதுவரை 3 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

மீன்பிடிக்கும் போது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் - ரத்தம் சொட்ட சொட்ட எஸ்.பி. அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு

கோவையில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் சொட்ட சொட்ட வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டை சேர்ந்த ராஜரத்தினம், தன் மனைவியின் ஊரான கோவைக்கு வந்துள்ளார். உடல்நலம் குன்றிய மனைவி உயிரிழக்கவே, சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார் ராஜரத்தினம். அப்போது வாலாங்குளத்தில் மீன்பிடிக்க சென்ற அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்க வந்த ராஜரத்தினம், ரத்தம் சொட்ட சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர் போலீஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய நிதி நிறுவனம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு - 8 கார்கள் பறிமுதல்

திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்றைய தினம் வாடிக்கையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவை மீறி சுமார் 500க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் ஆட்சியரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக நிதி நிறுவனத்தின் தலைவர் உட்பட 150 பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இ-பாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அங்கு வந்திருந்த எட்டு கார்கள்
பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

396 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

317 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

113 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

43 views

பிற செய்திகள்

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

22 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

555 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

18 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

79 views

கிசான் முறைகேடு : "தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும்" - சிபிசிஐடி தகவல்

பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடி-யிடம் பட்டியல் வழங்கியுள்ளது.

62 views

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தோண்டி எடுப்பு - உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்

தஞ்சையில் தனியார் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட உடல்உறுப்பு திருட்டு புகாரால் கொரோனாவால் இறந்தவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

507 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.