"சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும்" - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
x
ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரையிலான  6 மாதங்களுக்கு  சாலை வரியிலிருந்து விலக்கு வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது, இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   பேருந்துகளுக்கு காப்பீடு செலுத்துவதில் இருந்தும் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுளளது, கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக, தங்கள் வாழ்வாதாரமே முற்றிலும் முடங்கியுள்ளதாகவும், இதனால், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையில் இருந்து  வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்,  




உடல் நலன் பாதிக்கப்பட்ட ஆண் யானைக்கு தொடர் சிகிச்சை

யானையை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்
கோவை  மேட்டுப்பாளையம் வனப்பகுதியை யொட்டியுள்ள நெல்லிமலை வனப்பகுதியில்  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  நடக்க முடியாத நிலையில் உள்ள ஆண் யானைக்கு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களுடன் சேர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்., யானைக்கு காது மடல் மூலம் குளுக்கோஸ்  செலுத்தியும் ஊசி மூலம் மருந்து கொடுத்தும் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்,. யானையின் வாய் பகுதியில் ஏற்பட்ட புண் காரணமாக பசுந்தீவனங்களை  சாப்பிட முடியாததால் யானையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால் நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

===========


கால்நடை சந்தைகளை திறக்க வலியுறுத்தி போராட்டம் - கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆடு மற்றும் மாட்டுச்சந்தைகளை  திறக்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆடுகளுடன்  கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,  சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர், சமூக இடைவெளியுடன் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், ஆடுகளுக்கும் முககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது, 


=========


தனியார் நூற்பாலைகளில் சட்டவிரோத செயல் - சட்டவிரோதமாக மாணவிகள்  பணியமர்த்தப்பட்டதாக வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தனியார் நூற்பாலைகளில், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவிகள் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது., இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நிதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது., மேலும், மனுதாரரின் பின்புலம் குறித்தும் அறிக்கைதாக்கல் செய்ய தமிழக அரசுத்தரப்புக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்

======


துபாய்க்கு வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு - உடலை இந்தியா கொண்டு வர கோரிக்கை

விருத்தாசலம் அருகே துபாய் நாட்டுக்குச் சென்று உயிரிழந்த கணவனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு  கடந்த 10 நாள்களாக 4  குழந்தைகளுடன் மனைவி தவித்து வருகிறார், துபாயில் பணியாற்றி வந்த கடலூர் மாவட்டம் வடகரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடநலன் பாதிக்கப்பட்டு ஜூன் 21 ஆம் தேதி உயிரிழந்துள்ளார், இந்த நிலையில் பாலகிருஷ்ணன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்,

Next Story

மேலும் செய்திகள்