கொரோனா பரவ காரணமான நேதாஜி சந்தை - 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி

வேலூர் மாவட்டம் நேதாஜி சந்தை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 10 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பரவ காரணமான நேதாஜி சந்தை - 500க்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதி
x
மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா

திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் 
சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  உதவி காவல் ஆணையர் உட்பட 4 பேருக்கு 
தொற்று உறுதியாக இருப்பது காவலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பரவ காரணமான நேதாஜி சந்தை - 500க்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதி

வேலூர் மாவட்டம் நேதாஜி சந்தை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 10 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து நேதாஜி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தை  உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சந்தையில் பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், செயல்பட்டதால்  பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய அபாயம் எழுந்துள்ளது.


ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கிடைத்த ரூ.9,000 - போலீசாரிடம் ஒப்படைத்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான ராமன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்  ஏடிஎம்மில் எட்டாயிரம் ரூபாய் பணம் எடுத்த போது, 9 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் மீண்டும் ஆயிரம் ரூபாய் எடுத்த போது, ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. ஆனால் அவரது கணக்கில் ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாத ஆசிரியர் அந்த 9 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆசிரியரின் இந்த நேர்மையான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


ஹாட் மிக்ஸ் பிளான்ட், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலையில் குடிநீர் ஆதாரம்,சுற்றுச்சூழல் மற்றும் விவசாய விளைநிலங்கள் ஆகியவற்றினை பாதிக்கும் வகையில் கல்குவாரி மற்றும் ஹாட்மிக்ஸ் பிளான்ட் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை தடை செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஐங்குணம் கிராமத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோஷமிட்டனர்.


அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஊரடங்கு தளர்வில் ரயில் சேவை தொடங்கப்பட்டால் தயாராக இருக்கும் வகையில் பாலக்காடு முதல் பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல் வரை செல்லும் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இரண்டு பெட்டிகள் கொண்ட அதிவேக ரயிலை இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தை   இருப்புப்பாதை சரிபார்ப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் ரயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை பாதிப்புகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்