பாம்புகளை மீட்டு வனத்தில் விடும் பட்டதாரி இளைஞர் - 6 ஆண்டுகளில் 5 ஆயிரம் பாம்புகளை பிடித்து சாதனை

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுவரும் பட்டதாரி இளைஞரை பற்றிய செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்.
பாம்புகளை மீட்டு வனத்தில் விடும் பட்டதாரி இளைஞர் - 6 ஆண்டுகளில் 5 ஆயிரம் பாம்புகளை பிடித்து சாதனை
x
பாம்பை கண்டால், பயங்கொள்ளாதவர்கள் இல்லை என்ற நிலையில், படம் எடுத்து ஆடும் பாம்பையும், லாவகமாக பிடித்து வருகிறார், கடையநல்லூரை சேர்ந்த 24 வயதேயான ஷேக் உசைன். அமெரிக்கன் கல்லூரியில் இளங்களை பட்டம் பெற்ற அவர், சாரைப் பாம்பு முதல் ராஜநாகம் வரை  எல்லா விதமான பாம்புகளையும் அச்சமில்லாமல் துச்சமாக கையாளுகிறார். குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில்  பாம்புகள் புகுந்தால் வனத்துறையின்  உதவியோடு மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடும் சேவையை செய்து வரும் ஷேக் உசைன், ஆறு ஆண்டுகளில் 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை  பிடித்துள்ளார். பாம்புகளை கொல்லக்கூடாது என்றும் அவைகளை பாதுகாப்பதே நம் கடமை எனவும் கூறும் இவர்,  வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு  பாம்புகளை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி  அளித்து வருகிறார். குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு வனத்தில் விடும் சேவையை செய்து வரும் ஷேக் உசைனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தந்தி செய்திகளுக்காக கடையநல்லூரில் இருந்து செய்தியாளர்  சுப்பிரமணியன்

Next Story

மேலும் செய்திகள்