உயிரை பறிக்க இணையத்தில் வலை விரிக்கும் சூதாட்ட கேம்கள் - சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர்கள் எடுக்கும் விபரீத முடிவு

வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களிடம் ஆசையை தூண்டி , ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
உயிரை பறிக்க இணையத்தில் வலை விரிக்கும் சூதாட்ட கேம்கள் - சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர்கள் எடுக்கும் விபரீத முடிவு
x
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கில் இணையத்தை பயன்படுத்தும்  இளைஞர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இணையத்தை பயன்படுத்தும் போது உயிர் பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற வாசகத்தை கண்டதுடன் இளைஞர்கள் கண்மூடித்தனமாக  ஆன்லைன் சூதாட்ட கேமை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்குகின்றனர்.கொஞ்சம் கொஞ்சமாக சூதாட்டத்திற்குள் மூழ்கி, கடைசியில் பணம் எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாய் நிற்பவர்கள், எடுக்கும் முடிவு தற்கொலைதான். இதற்கு உதாரணம்...  சமீபத்தில் சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார்.... தான் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.. கடைசியில், மன உளைச்சலுக்கு உள்ளான நிதிஷ்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கான தீர்வு , ஆன்லைன் சூதாட்ட கேமை விளையாடாமல் இருப்பது தான் என்கிறார் தகவல் தொழில்நுட்ப நிபுணர் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் , தகவல் தொழில்நுட்ப நிபுணர்

ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என்கிறார்... இதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ்..... 

(ராமதாஸ் அறிக்கை)

வெகு விரைவில் ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு தடை விதிக்கப்படாவிட்டால் , உயிரிழப்புகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தந்திடிவி செய்திகளுக்காக செய்தியாளர் ரமேஷ்.


Next Story

மேலும் செய்திகள்