தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை தொடர்ந்து சென்னையில் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டம்
பதிவு : ஜூலை 30, 2020, 08:28 AM
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை தொடர்ந்து சென்னையிலும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வழியாக தங்க கடத்தலில் ஸ்வப்னா ஈடுபட்டிருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை, திருச்சி விமான நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்க கடத்தல் சம்பவங்களில் கைதானவர்கள் பற்றிய தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் தங்கம் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இங்கு விசாரணை நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் இங்கு வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1143 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

303 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

112 views

பிற செய்திகள்

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

1880 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

9 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

18 views

தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் - தூதரக வாகனத்தை கைப்பற்ற நடவடிக்கை

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7 views

ராமர் கோவில் அடிக்கல் - அயோத்தியில் விழாக்கோலம்

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக தயாராகி வரும் அயோத்தி நகரம், இரவில் மின் விளக்குகளின் ஒலியால் ஜொலிக்கிறது.

209 views

மர்மம் நிறைந்த இலங்கை தாதா உயிரிழந்த வழக்கு - சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி உத்தரவு

இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். மர்மம் நிறைந்த அங்கோடா லோக்கா மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

206 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.