கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் விவகாரம் - வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு

கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் செயல்படாத போதிலும் , சத்துணவு திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு , உரிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் விவகாரம் - வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு
x
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலத்துறை செயலாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மொத்தம் 48 லட்சத்து 56 ஆயிரத்து 783 மாணவர்கள் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.கொரோனா காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து முட்டைகள் வழங்குவதில் ஆபத்து இருப்பதால் , ரேஷன் கடைகள் மூலம் வழக்கமான அளவை விட கூடுதல் பருப்பு வழங்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள் நேரடியாக சென்று வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்