டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் சென்னை மாநகராட்சி - அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டுகோள்

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் சென்னை மாநகராட்சி - அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டுகோள்
x
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்தும், அதனை தடுக்க வேண்டிய முறைகள் குறித்தும்  சென்னை மாநகராட்சி  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடுமையான காய்ச்சல்,  மூட்டு வலி மற்றும் தசை வலி,  தோல் தடிப்புகள் கண் வலி கடுமையான தலை வலி ஈறுகளில் ரத்தம் கசிதல்  போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தேக்க தொட்டிகள் அனைத்தையும் கொசு புகா வண்ணம் இறுக்கமாக மூடி வைக்கவேண்டும்  எனவும் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காத வண்னாம்  தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டியின் கீழ்தட்டு, விண்டோ ஏசி பொருத்தப்பட்டுள்ள பிளேட் குளிரூட்டிகள் போன்றவற்றில் சேரும் தண்ணீரை வாரம் இருமுறை அகற்றவேண்டும்  எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்ற சித்த மருத்துவத்தை பயன்படுத்தலாம் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்