கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமி - வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வசித்து வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
பதிவு : ஜூலை 26, 2020, 03:52 PM
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் இந்த நிலைக்கு அவரது உறவினர்களே காரணம் என்பது தான் சோகம்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்தார் 14 வயதான சிறுமி. துப்புரவு தொழிலாளியாக தாய் வேலை பார்த்து வந்த நிலையில் பிளாட்பார வாழ்க்கை இவர்களுடையது. 

வீடு இல்லாததால் தண்ணீர் தொட்டி அருகே உள்ள இடத்தில் 8 ஆண்டுகளுக்கும் ​மேலாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியின் மீது அங்கிருந்தவர்களின் கவனம் விழுந்துள்ளது. 

முதலில் சிறுமியிடம் அவரின் அக்காள் கணவரே அத்துமீறி இருக்கிறார். இதை மற்றவர்களிடம் அவர் சொல்லவே, மற்றவர்களுக்கும் சிறுமி இரையாக்கப்பட்டார். அக்காள் கணவரின் நண்பர், அவரின் நண்பர் என கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் இந்த சிறுமி. 

மகளுக்கு நடப்பது என்னவென்றே தெரியாத அளவிற்கு இருந்துள்ளார் சிறுமியின் தாய். இதனிடையே சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அதுவும் வெளியே தெரியாமலே இருந்துள்ளது. இந்த சூழலில் தான் பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி. 

சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்கு தெரியவே, அவர்கள் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது தான் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளியுலகத்திற்கு வந்தது. சிறுமியை சீரழித்ததை ஒப்புக் கொண்ட அவரின் அக்கா கணவர் தினேஷ், ஒரு கட்டத்தில் சிறுமிக்கு தாலி கட்டியதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். 

தாலி கட்டிய சிறுமியை மற்றவர்களுக்கு விருந்தாக்கியதோடு, அவரை மனதளவிலும் சித்ரவதை செய்திருக்கிறார் தினேஷ். இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருடன் சேர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிறுமியின் உறவினரான அப்பு என்கிற ராஜ், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

மேலும் மகளின் இந்த நிலைக்கு காரணமான தாயும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்... 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

114 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

43 views

பிற செய்திகள்

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

26 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

585 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

22 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

98 views

கிசான் முறைகேடு : "தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும்" - சிபிசிஐடி தகவல்

பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடி-யிடம் பட்டியல் வழங்கியுள்ளது.

63 views

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தோண்டி எடுப்பு - உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்

தஞ்சையில் தனியார் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட உடல்உறுப்பு திருட்டு புகாரால் கொரோனாவால் இறந்தவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

525 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.