கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமி - வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வசித்து வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
பதிவு : ஜூலை 26, 2020, 03:52 PM
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் இந்த நிலைக்கு அவரது உறவினர்களே காரணம் என்பது தான் சோகம்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்தார் 14 வயதான சிறுமி. துப்புரவு தொழிலாளியாக தாய் வேலை பார்த்து வந்த நிலையில் பிளாட்பார வாழ்க்கை இவர்களுடையது. 

வீடு இல்லாததால் தண்ணீர் தொட்டி அருகே உள்ள இடத்தில் 8 ஆண்டுகளுக்கும் ​மேலாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியின் மீது அங்கிருந்தவர்களின் கவனம் விழுந்துள்ளது. 

முதலில் சிறுமியிடம் அவரின் அக்காள் கணவரே அத்துமீறி இருக்கிறார். இதை மற்றவர்களிடம் அவர் சொல்லவே, மற்றவர்களுக்கும் சிறுமி இரையாக்கப்பட்டார். அக்காள் கணவரின் நண்பர், அவரின் நண்பர் என கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் இந்த சிறுமி. 

மகளுக்கு நடப்பது என்னவென்றே தெரியாத அளவிற்கு இருந்துள்ளார் சிறுமியின் தாய். இதனிடையே சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அதுவும் வெளியே தெரியாமலே இருந்துள்ளது. இந்த சூழலில் தான் பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி. 

சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்கு தெரியவே, அவர்கள் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது தான் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளியுலகத்திற்கு வந்தது. சிறுமியை சீரழித்ததை ஒப்புக் கொண்ட அவரின் அக்கா கணவர் தினேஷ், ஒரு கட்டத்தில் சிறுமிக்கு தாலி கட்டியதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். 

தாலி கட்டிய சிறுமியை மற்றவர்களுக்கு விருந்தாக்கியதோடு, அவரை மனதளவிலும் சித்ரவதை செய்திருக்கிறார் தினேஷ். இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருடன் சேர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிறுமியின் உறவினரான அப்பு என்கிற ராஜ், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

மேலும் மகளின் இந்த நிலைக்கு காரணமான தாயும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்... 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

278 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

220 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

177 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

145 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

95 views

பிற செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை - திட்டமிட்டு பேரறிவாளன் விடுதலை தாமதம்

சிறுபான்மை மக்களுக்கு, பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக மனித நேய ஜனநாய கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

6 views

தேர்தல் பணியில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

20 views

சினிமா பாணியில் பயங்கரம் - நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கும்பல்

ஒசூரில் தனியார் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளை கும்பல், சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

52 views

சிறுமி கண் முன்னால் தாய் அடித்துக் கொலை- மனம் பதற வைக்கும் மழலையின் வாக்குமூலம்

சென்னையை அடுத்த ஆவடியில், எழு வயது சிறுமியின் கண்முன்னே அவரின் தாய் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியை அப்படியே பதிவு செய்யும் செய்தி தொகுப்பு இது...

24 views

குடிபோதையில் தாயை திட்டியதால் விபரீதம் - நண்பனின் கண்களை தோண்டி எடுத்த கொடூரம்

சென்னையில் நண்பனின் கண்களை தோண்டி எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

20 views

"நான் கடவுள்" எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...

நாமக்கல் மாவட்டத்தில், தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறுவன்...தன்னைச் சுற்றியிருப்பவர்களை எல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.