நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற மாநாடு - மதுரை மாணவி நேத்ரா காணொலி காட்சி மூலம் பங்கேற்பு

அமெரிக்காவில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று மதுரை மாணவி நேத்ரா உரையாற்றினார்.
நியூயார்க்கில்  ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற மாநாடு - மதுரை மாணவி நேத்ரா காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
x
நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில்  பாலின சமத்துவம் குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை மாணவி நேத்ரா முதல் முறையாக காணொலி காட்சி முலம் கலந்து கொண்டு உரையாற்றினார். பாலின சமத்துவத்தை உணர செய்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல்' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மாணவி நேத்ரா இந்திய அரசு,  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் சார்ந்து செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தமிழக அரசின் சார்பாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுவது குறித்தும் எடுத்துரைத்தார். 

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை மத்திய அரசு 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக  அதிகரித்தது குறித்தும் நேத்ரா  எடுத்துரைத்தார். 
எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவிய மாணவி நேத்ராவை பிரதமர் மோடி பாராட்டினார்.  ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட யுஎன்ஏடிஏபி என்ற தன்னார்வ நிறுவனம், உலக ஏழைகளின் நல்லெண்ண தூதுவராக நேத்ராவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்