கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட16 பேர் - மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட16 பேர் - மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு
x
அருப்புக்கோட்டை  அருகே  குல்லூர் சந்தை பகுதியில்  உள்ள அகதிகள் முகாமில் 908 பேர் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 16 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 
4 பேர் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சம்மதித்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து ஊர் முழுவதும் 
சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

சுகாதாரத்துறையினர் ஆம்பலன்சில் அழைத்து செல்ல 6 மணி நேரம் காத்திருந்தும் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தி எஞ்சிய 12 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்