"அண்ணா பல்கலை. மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை" - உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளுக்கு பதிவாளர் சுற்றறிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் எச்சரித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை - உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளுக்கு பதிவாளர் சுற்றறிக்கை
x
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவாளர் எச்சரித்துள்ளார். வளாக கல்லூரிகள், உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு, அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், அண்ணா பல்கலைக் கழகம், இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், சமூக வலை தளங்களில் களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டு வருவதாக கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் நபர்கள் மீது நிர்வாகத் தரப்பில், நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் பதிவாளர் கருணாமூர்த்தி எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்