கேரள தங்க கடத்தல் கும்பல் - திரைத்துறை தொடர்பு

கேரள தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திரைப்படத் துறையில் முதலீடு செய்ததாக வெளிவரும் தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள தங்க கடத்தல் கும்பல் - திரைத்துறை தொடர்பு
x
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய பிரதியான பைசல் பரீத், சுவப்னா சுரேஷ் ஆகியோருக்கு திரைத் துறையில் முதலீடு இருப்பதாக வெளிவந்த தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என திரைத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சவூதி அரேபியாவில்  இருந்து  நூதன முறையில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய பிரதியான பைசல் பரீத்துக்கு, திரைப்படத் துறையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் 4 திரைப்படங்களில் இவர் முதலீடு செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு திரைப்படத்தின் பின்னணியில் பைசல் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான ஸியாத் கோக்கர், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரும்  முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு பின்னால் இதுபோன்ற முதலீடுகளும், கருப்பு பணமும் இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையை  பிலிம் சேம்பரும் முன்வைத்துள்ளது. துபாயில் உள்ள பைசல் பரீத்தை இந்தியாவிற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டால், இது தொடர்பான விபரங்கள் வெளிவரும் என திரைப்படத் துறையினர் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்