"எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி முடக்கம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டு

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த விடாமல் அதிமுக அரசு தடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி முடக்கம் - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றசாட்டு
x
எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த விடாமல் அதிமுக அரசு தடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாய் எடுத்துள்ளதாகவும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தலா 25 லட்சம் ரூபாய் கொரோனா பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மீதமுள்ள ஒன்னே முக்கால் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த முடியாதவாறு உள்நோக்கத்துடன் முடக்கி வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், செலவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடாமல் வைத்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்