444 மரணங்கள் விடுபட்டதன் எதிரொலி : ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

கொரோனா மரணங்கள் தொடர்பாக சுகாதாரத் துறைக்கு வாரம்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
444 மரணங்கள் விடுபட்டதன் எதிரொலி : ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
x
மறு ஆய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் விடுபட்ட  444 மரணங்கள் கொரோனா மரணங்களாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் கடிதம்  ஒன்றை அனுப்பியுள்ளார் . அதில், ஐ.சி.எம்.ஆர் விதிகளின் படி கொரோனா தொடர்பான இறப்பு முறையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சமர்ப்பித்த தினசரி இறப்பு அறிக்கையை சரிபார்த்து, உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படும் தகனம் மற்றும் மயானங்களில் உள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டு, இறப்புகள் எண்ணிக்கை தவறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  இது தொடர்பாக மாநில அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர்  உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்