அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்த புதிய அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் , முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்
x
அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்த புதிய அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் , முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.  அமைச்சர்கள் பென்ஜமின், கே.சி வீரமணி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா, பரஞ்சோதி, ந‌த்தம் விசுவநாதன் ஆகியோருக்கும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக அமைப்பு செயலாளர்கள் விபரம் : கொள்கை பரபரப்பு செயலாளர்களும் அறிவிப்பு


அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்களாக , வி.கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, திருப்பூர் சிவசாமி, பி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் உள்பட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் நடிகை விந்தியாவிற்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இளம்பெண்கள், இளைஞர்கள் பாசறை செயலாளர் அறிவிப்பு


அதிமுகவின் இளம்பெண்கள் இளைஞர்கள் பாசறை செயலாளராக டாக்டர் வி.பி.பி.பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்