ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பில் எந்த தொடர்பும் இல்லை" - முன்ஜாமீன் மனுவின் போது காவலர்கள் கூறிய தகவல்கள்

சாத்தான்குளம் வழக்கில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தவறுதலாக தன்னை கைது செய்துள்ளதாக காவலர்கள் தாமஸ் மற்றும் முத்துராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பில் எந்த தொடர்பும் இல்லை - முன்ஜாமீன் மனுவின் போது காவலர்கள் கூறிய தகவல்கள்
x
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், ஜெயராஜ், பென்னிக்ஸூக்கு எதிராக கையெழுத்து போடுமாறு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் தங்களை வற்புறுத்தியதாக முத்துராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெயராஜ், பென்னிக்ஸை தான் தொட்டது கூட கிடையாது என்றும், வழக்கில் தன்னை தவறுதலாக கைது செய்துள்ளதாக தாமஸ் பிரான்சிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்