விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 645 பேருக்கு கொரோனா - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,999 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 4 போலீசார், ஏழு சுகாதார ஊழியர்கள் மற்றும் 14 சிறுவர்கள் உட்பட மேலும் 645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
விருதுநகர் மாவட்டத்தில் இன்று 4 போலீசார், ஏழு சுகாதார ஊழியர்கள் மற்றும் 14 சிறுவர்கள் உட்பட மேலும் 645 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஐயாயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் 107 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 166 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இரண்டாயிரத்து 947 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மூவாயிரத்து 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்