இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை
x
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர்  வெங்கடய்யா பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி. உத்திரமேரூர் தீயணைப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இவரின் மனைவி ஜெயந்தி. மகள் செந்தாரகை. கடந்த மே மாதம் 24ஆம் தேதி யுவராஜ் என்பவருடன் செந்தாரகைக்கு திருமணம் நடந்த நிலையில் வண்டலூரில் இருவரும் வசித்து வந்தனர். இதனிடையே ஊரடங்கு காரணமாக தன் தாய் வீட்டுக்கு வந்த செந்தாரகை, கடந்த 8ஆம் தேதி குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகளின் சடலத்தை அடக்கம் செய்ய பெற்றோர் இருவரும் தீவிரம் காட்டி வந்ததால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே, போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் செந்தாரகை, கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜியை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்