கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் சர்ச்சை தொடர்பாக, கைது செய்யப்பட்ட செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்
x
கந்த கஷ்டியை இழிவுபடுத்தியதாக கூறி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன், சுரேந்திரன் உள்ளிட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கறுப்பர் கூட்டத்திற்கு பின்புலமாக இருப்பது யார், எங்கு செயல்படுகிறார்கள், அவர்களுக்கு நிதி ஆதாரம் எவ்வாறு கிடைத்தது? என்பது குறித்த ஆவணங்கள் கிடைக்க பெற்றுள்ளதால் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மனுவில் கோரி இருந்தனர். இருதரப்பு வாதங்களும் முடிந்து நிலையில், செந்தில் வாசனை விசாரிக்க 4 நாள் போலீஸ் காவல் வழங்கி  நீதிபதி ரோஸ்லின் உத்தரவிட்டார். வெறும் தொகுப்பாளராக மற்றும் இருந்ததாலும், காவலில் எடுத்து விசாரிக்க போதிய முகாந்திரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்காததாலும், சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்