சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள "ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது"

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானதான தகவல் வெளியாகி உள்ளது.
x
சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற, இழப்பீடு தொகை செலுத்தியதன் மூலம் அது அரசுடைமையானது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் ஜெயலலிதாவின் இல்லம் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. 

------------

Next Story

மேலும் செய்திகள்