ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்கள் - வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்கள்

பாதி பணிகளோடு ஊரடங்கால் ஏராளமான படங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் அதனை தொடர்ந்து நடத்தவும், குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்கள் - வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்கள்
x
பாதி பணிகளோடு ஊரடங்கால் ஏராளமான படங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் அதனை தொடர்ந்து நடத்தவும், குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக திரைப்படத்துறை முடங்கிக் கிடப்பதால் தமிழ் திரையுலகில் சுமார்1500 கோடி  ரூபாய் வரை மூலதனமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்களே அதிகம் என்கிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள்... 
அதிலும் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்து சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினால் போதும் என்ற அளவில் ஏராளமான படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஜி.பி. பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் படம் 7 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் போதும் என்ற அளவில் இருக்கிறது. இதேபோல் அதர்வா நடிக்கும் 4 கில்லாடிகள் படம், தன்ஷிகா நடிக்கும் யோகிடா என்ற படம், அசோக் செல்வன் நடிக்கும் ஆக்சிஜன் என்ற படம் சில நாட்கள் படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி உள்ள நிலையில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்புகளை எதிர்நோக்கி இருக்கும் படங்கள் ஏராளம். இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். ஏற்கனவே தமிழ் சீரியல்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை போல தமிழ் படங்களுக்கும் குறைவான நாட்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீரியல்களை போன்ற குறுகிய இடத்திற்குள் சினிமா படப்பிடிப்புகள் நடத்த சாத்தியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்தால் திரைப்பட துறையை நம்பியிருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். எனவே குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்